தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது என மரிய வில்சன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் முழுமையான (2026-27 நிதியாண்டு) பட்ஜெட், இன்று (ஆகஸ்ட் 5) புதன்கிழமை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன், காலை 10 மணிக்கு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது தமிழக வெற்றிக் கழக அரசின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கு பிறகு, இரு திராவிட கட்சிகள் இல்லாமல், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்று 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூறிய, மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் மற்றும் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்கள் இதில் இருக்கும் என்று எதிர்பார்ப்பார்க்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில், நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். இதில், கடந்த 3 மாதங்களில் த.வெ.க அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது என மரிய வில்சன் கூறியுள்ளார். 2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அமைவது இலக்கு என்று கூறியுள்ளார்.
