தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, Tasmace2e.in என்ற இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து, க்யூஆர் கோட் காண்பித்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்லும் நடைமுறை உள்ளது. இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து, நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.