இந்த போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த கணேஷ் பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கார்த்திக் ஆகிய இருவரையும் கோட்டை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,000 போதை மாத்திரைகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.