பேராசிரியர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக இங்கு ஒரு பி.எச்.டி மாணவர் சேர்க்கை கூட நடைபெறவில்லை. இதனால் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து, தேவையான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தமிழ் அறிஞர்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் உருளையான்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ ஜி.நேரு (எ) குப்புசாமி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இந்த மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களை விரிவாக ஆய்வு செய்து ஆவணப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இங்கு எம்.பில் (M.Phil) மற்றும் பி.எச்.டி (Ph.D) படிப்புகள் நடத்தப்பட்டு, ஆய்வாளர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன. மேலும், புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்து புதுவை மாநிலத்திற்குப் பெருமை சேர்த்து வந்தது இந்நிறுவனம்.

You missed