முதலமைச்சர் விஜய், திங்கட்கிழமை தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியமைத்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

த.வெ.க தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசியல் தலைவர், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.