“கொளத்தூரில் 5 நிமிடம் தான் முதல்வர் விஜய் பேசினார்; அதற்கே 75 வருட கட்சி இப்போது 59 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலை​மை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. முன்னதாக, சட்டப்பேரவைக்கு வருகை தந்த தி.மு.க-வினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சி.எம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்பதுபோலவும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களையும் அணிந்திருந்தனர்.