தமிழக மின் வாரியத்தின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ‘சிங்கப்பெண்’ படையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக மின் வாரியத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த அவர், பா.ஜ.கவுக்கும் தி.மு.க.வுக்கும் தான் நெருக்கமான உறவு உள்ளது. இதுவரை, பலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்டது. ஆனால், கையெழுத்தாகவில்லை. செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அது தேங்கி கிடக்கிறது.யார் யார் மீது இணக்கமாக இருக்கிறார்கள்.கவர்னர், தி.மு.க பா.ஜ.க ஒன்றாக இருக்கிறார்கள்.