தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18, 2026) ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க மரபு மாற்றம்

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய மரபு மாற்றம் இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டுள்ளது. வழக்கமாக, சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, கூட்டத்தொடர் முழுமையாக நிறைவடைந்த பின்னரே நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்படும்.

ஆனால், முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவி காலத்தில், கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி அவர் மூன்று முறை சட்டமன்ற உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அமர்ந்த நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனை மாற்றியமைக்கும் விதமாக, தற்போதைய விஜய் தலைமையிலான அரசு, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே தேசிய கீதம் இசைக்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. முதலமைச்சர் விஜய் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதை செலுத்திய பின்பே ஆளுநர் உரை தொடங்கியது. ஆளுநர் உரைக்கு பின்னரும் 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.