தமிழகத்தில் புதிதாக 8,000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று மாநில சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 8,000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று மாநில சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் பழைய விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் மறுபரிசீலனை செய்வது குறித்து மட்டுமே அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் அனைத்து விதிகளின்படி முழுத் தகுதியுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
