காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியில் அங்கம் வகிப்பதாலும் எதிர்ப்பு இருக்காது என்ற ஆணவத்தில் டி.கே. சிவகுமார் துடுக்குடன் பேசுவதாகச் சாடியுள்ள கே.என்.நேரு, காவிரி உரிமையைக் காக்கத் தி.மு.க எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்து அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட விவரங்களை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக அறிவித்துள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் பேச்சுக்குத் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் பலவீனமான கூட்டணி அரசு அமைந்துள்ளதாலும், தங்களது காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சியில் அங்கம் வகிப்பதாலும் எதிர்ப்பு இருக்காது என்ற ஆணவத்தில் டி.கே. சிவகுமார் துடுக்குடன் பேசுவதாகச் சாடியுள்ள நேரு, காவிரி உரிமையைக் காக்கத் தி.மு.க எத்தகைய தியாகத்திற்கும் தயார் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இப்போதாவது வாய் திறந்து கர்நாடக அரசுக்கு அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
