சென்னையில் இன்றும், நாளையும் வெப்ப அலை காரணமாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி பாரன்ஹீட் (104°F) வரை பதிவாகக்கூடும்; தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் வெயில் 100°F-ஐத் தாண்டி சுட்டெரிக்கும். இந்த வெப்ப நிலை 2 நாட்களுக்குப் பிறகு படிப்படியாகக் குறையும்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது குறித்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் (மே 24, 25) ஆகிய 2 நாட்களுக்கு வெயிலின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் (104°F) வரை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் பரவலாக பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சுட்டெரிக்கும். இந்த அசுர வெப்ப அலை (Heat Wave) இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.