கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சி்றுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை சடலமாக மீட்டுள்ளனர்.
சிறுமியை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசியுள்ளனர். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில், கார்த்திக் தப்பியோட முயன்றதில் கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிபதி அருண்குமார், குற்றவாளி மோகன்ராஜை வருகின்ற மே 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறவில்லை என்று சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.
