த.வெ.க தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேரில் கடிதம் கொடுத்த நிலையில் ஆளுநரின் பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் த.வெ.க-விடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் ராஜினாமா செய்தால் 107 தொகுதிகள் தான் இருக்கும்.