சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கலான நிலையில் விஜய் புகழாரம் பாடிய அமைச்சர் வினோத்திற்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

விஜய் தலைமையிலான த.வெ.க அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், வியாழக்கிழமை சட்டசபையில் தாக்கலானது. காலை 9:30 மணிக்கு வேளாந்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அமைச்சர் வினோத், ”மனநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள். திரைமன்றங்களில் மட்டும் அல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள் தான். உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழல் ஒவ்வொன்றையும் களை எழுத்து, சமத்துவம் எனும் செடி வளர்த்து, மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து இருக்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.
