விஜய், ஆளுநரை சந்தித்ததைத் தொடர்ந்து அது குறித்த விளக்கக்குறிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், த.வெ.க ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை என விளக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (த.வெ.க) ஆளுநர் மாளிகைக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.