தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற த.வெ.க. பதவியேற்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு இல்லாததால், ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.