மிகக் குறுகிய காலத்தில் விஜய்யின் அரசியல் எழுச்சி என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், எந்த கட்சி ஜெயிக்கும் என்று சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானவை தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டது. சில த.வெ.க ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியும் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கிறது என்று.