கோடை கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏப்.30 புறப்படும் இந்த ரயில்களுக்கான கால அட்டவணை மற்றும் முன்பதிவு குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை (30-ந் தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06045) மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து மே 3-ந் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06046) மறுநாள் மதியம் 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.