திருச்சி மணப்பாறை அருகே அதிரடிப்படை போலீசார் தாக்கியதாக கூறி, வெள்ளையக்கோன்பட்டி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தில் இன்று பதற்றமான சூழல் நிலவியது. காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து பொதுமக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.