1978-ம் ஆண்டு வெளியான படம் தப்பு தாளங்கள். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடா என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இன்றைக்கும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக படம் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கே.பாலச்சந்தர் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், அவர் செய்த ஒரு தவறுக்காக பாலச்சந்தர் செருப்பால் அடிப்பேன் என்று தனி அறையில் அழைத்து சென்று கடுமையாக திட்டியுள்ளார் என்று ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.