சின்னத்திரை பிரபலம் தாமரைச்செல்வி, சமீபத்திய சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சின்னத்திரை மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் தாமரைச்செல்வி. குறிப்பாக ‘சின்ன மருமகள்’ சீரியல் வழியாக இல்லத்தரசிகளின் கவனத்தைப் பெற்ற இவர், பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் போட்டியாளராகப் பங்கேற்று மேலும் பிரபலமானார். சமீபத்தில், தனது சக நடிகையான ஸ்வேதாவின் கணவர் மீது நகை மோசடிப் புகார்களைக் கூறி வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.