Arasumedia update: தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயம் ஆக்க முடியாது – உச்சநீதிமன்றம்
தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு, அரசு நலத்திட்டங்களை பெறுவதில் இருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என கூறியுள்ளது.
தி.மு.க.வில் ஆணாதிக்கம் அதிகம் – குஷ்பு
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் சுந்தர்.சி.க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகையம் பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது சுந்தர்.சி கேள்வி எழுப்பிய பிறகுதான் ஒரே இரவில் பெயிண்ட் அடிக்கிறார்கள், டைல்ஸ் ஒட்டுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். தெருவிளக்குகள் இல்லை என்று சொன்னவுடன் அடுத்த நாள் லைட் போடுகிறார்கள். குப்பைகள் அதிகம் இருக்கிறது என்று சொல்லும்போது அடுத்து அதை சுத்தம் செய்கிறார்கள். 10 வருடம் முடியாத ஒன்றை சுந்தர்.சி 10 நாளில் மேஜிக் மாதிரி செய்திருக்கிறார், மக்கள் இப்போது இருக்கும் எம்.எல்.ஏ வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். தி.மு.க.வில் ஆணாதிக்கம் அதிகம். தொகுதி மறுவரையறை வந்தால் பெண்கள் முன்னேறிவிடுவார்கள் என்று தான் எதிர்க்கிறார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.
