ஜன நாயகன் போல், இதற்கு முன்பு திரையரங்கில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த திரைப்படங்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து டிவியில் ஒளிபரப்பு செய்யும் காலம் மாறி தற்போது ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே திருட்டுத்தனமாக இணைதளங்களில் வெளியாகும நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் விஜய் நடிப்பில் வெளியான ஜன நாயகன் திரைப்படம். பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாக இருந்த ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகவில்லை. 

இதனிடையே கடந்த வாரம் இந்த படம் திடீரென இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக சட்டவிரோமாக இணையத்தில் வெளியான இந்த படம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜன நாயகன் திரைப்படத்தை திரையில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு முன்பு திரையரங்கில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த திரைப்படங்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

ஜக்குபாய்

ரஜினிகாந்த் நடிக்க மறுத்து சரத்குமார், ஸ்ரேயா, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘ஜக்குபாய்’. இந்த படம் ரிலீஸ்க்கு முன்பே, சென்சார் செய்யப்படாத நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீசாகி அதிர்ச்சி கொடுத்தது. அதன்பிறகு திரையரங்குகளில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.