கடந்த 2023 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலே தற்போது மத்திய கிழக்கு அரசியலை பதட்டமான நிலைக்கு மாற்றியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகான இஸ்ரேலின் பதிலடி இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீவிரமானதாக இருந்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் நோக்கம் ஹமாஸை முழுமையாக அழித்தொழித்து பலஸ்தீன அதிகார மையத்தை அமைதியை சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு குழுவிற்கு மாற்ற வேண்டும் என்பதுதான்.
இந்த தாக்குதல் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேல நடத்திய மிக விரிவான தாக்குதலாகும். ஹாமாஸ் இயக்கத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை இந்த இரண்டு வருட யுத்தத்தில் முழுமையாக தர்த்திருக்கிறது இஸ்ரேல். காசா பகுதியின் 55 விழுக்காடு பகுதியை இஸ்ரேலிய பாதுகாப்பு படை தனது கட்டுப்பட்டுல் வைத்துள்ளது. காஸாவின் வடக்கு பகுதி எல்லைகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் வெளியேற்றத்திற்கான ஒரே பாதையினை ராபா எல்லையை சுற்றி வளைத்து கைப்பற்றி இருந்தது இஸ்ரேல். இந்த யுத்தத்தில் இஸ்ரேல் காஸாவின் பெரும்பதி எல்லையை கைப்பற்றி காஸாவின் வான் பகுதி மற்றும் கடல் பகுதிகளை முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படை ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்பை தர்த்திருக்கிறது ஆனால் ஹமாஸ் இயக்கம் முழுமையாக அழிக்க முடியாது என்பது இஸ்ரேல்க்கு 30 வருட பாடமாகும். உலகளாவிய அளவில் ஹமாஸின் பொருளாதார வழிகளை முடக்கும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றாலும் ஹமாஸின் கட்டமைப்பு மற்றும் ஆயுத தளவாளங்கள் மிக வலிமையானது தற்போது இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதை முழுமையாக அழித்துள்ளது. இந்த போரில் சுமார் 72000 மக்கள் இறந்ததாக கணிப்புகள் தெரிவிக்கிறது ஆனால் உண்மை எண்ணிக்கை இதை விட அதிகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது
ஹமாஸ் இயக்கம் விடுதலை புலிகள் போல தலைமறைவு இயக்கம் அல்ல. ஹமாஸ் என்பது பொதுமக்கள். அவர்கள் போராளிகளாக மாறும்போது மட்டுமே போராளிகளாக இருப்பார்கள் மற்ற நேரத்தில் அவர்கள் பொதுமக்களாகவே இருப்பார்கள் என்பதால் பிக பெரிய அளவில் ஒரு இந அழிப்பை ஏற்படுத்தாமல் ஹமாஸை அழிப்பது எளிதல்ல
இதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை தயாராகவே இருந்தது ஆனால் அமெரிக்காவின் கடும் அழுத்தத்தால் போர் நிறுத்தத்தை மேற்கொண்டது இஸ்ரேல்.
இந்த போர் நிறுத்தம் அமெரிக் ஆதிபர் டிரம்ப் அவர்கள் தலைமை ஏற்கும் ஒரு குழுவும் ஹமாஸிற்கு எதிரான பாலஸ்தீனிய குழு ஒன்றும் இணைந்து இஸ்ரேலிய அரசோடு ஏற்படுத்தியுள்ளது
முதல் நடவடிக்கையாக ராபா எல்லையை திறந்து விட்ட இஸ்ரேல் தற்போது முன்னேறிய பகுதி வரை தற்காலிக எல்லையை ( Yelllow Line ) ஏற்படுத்தி இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் கூடைப்பின் சார்பில் சர்வதேச படை ( ISF/ International Stability Force ) ஒன்றை உருவாக்கி அதை காஸாவில் நிலைநிறுத்த போவதாக ஒப்பந்தம் கூறுகிறது. இந்த படையை இருப்பது ஆயிரம் வீரர்களும் எகிப்திய அரசால் பயிற்றுவிக்கப்படும் பன்னிரெண்டாயிரம் உள்ளூர் காவல் படையும் காசா பகுதியை ஐந்து பகுதிலக பிரித்து நிற்வாவகம் செய்யும்.
இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சனை தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தோள்களில் சுமத்தப்பட்டு விட்டது. இதன் மூலம் ஹமாஸ் இஸ்ரேலிய படையோடு மட்டும் மோதும் சூழல் தவிர்க்கப்பட்டு காஸாவில் சர்வதேச ஐரோப்பிய படைகளை எதிர்கொள்ளும் சூழல் வந்துவிட்டது. இதன் மூலம் ஹமாஸ் மீண்டும் ஒரு தாக்குதலை ஏற்படுத்த யோசிக்கும் அதே நேரம் ஹமாஸிற்கு எதிரான பாலஸ்தீனிய அமைப்பு சமாதானமான ஒரு சுமூக ஒப்பந்தத்திற்கு இறங்கி வரும் என்பது அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது
