Month: July 2026

நடு வழியில் பழுதான மின்சார பேருந்துகள்… தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் கட்டிய ஓம் நிறுவனம்.

மின்சார பேருந்துகள் அடிக்கடி பழுதாகுகிறது, நடுவழியில் சில பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட தூரமான 200 கி.மீ தூரத்தை எட்ட முடியாமல் பேருந்துகள் தவிக்கின்றன. சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.…

அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சியில் அரசு தலைமை பொது மருத்துவமனை அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர் திடீரென மகாத்மா காந்தி அரசு…

சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்: நா.த.க-வில் இருந்து இயக்குநர் களஞ்சியம் விலகல்

“கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான களஞ்சியம் கூறியுள்ளார். சக கட்சியினர் மீது வெறுப்பு அரசியல், தனிநபர் தாக்குதல்:…

கூகுள் பே மூலம் 7.5 லட்சம் ரூபாய் லஞ்சம்: கோவையில் சிக்கிய அரசு அதிகாரிகள்: விடிய விடிய விசாரணை.

இந்த ஆய்வில், கூகுள் பே தளம் மூலமாக மொத்தம் ஏழரை லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டது உறுதியானது. இதில் தாலுகா என்ஜினியர் என்பவர்தான் மிக அதிக அளவில் டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில்…

கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!

அதன்படி, போலி தங்கக்கட்டியின் ஒரு பகுதியில் ‘குயிக் பிக்ஸ்’ (Quick Fix) பசையைத் தடவி, அதன் மேல் உண்மையான தங்கத்தை ஒட்டியுள்ளனர். பின்னர், சரண்யா முன்னிலையில் அந்தப் பகுதியை மட்டும் உடைத்துக் கொடுத்துச் சோதனை செய்ய வைத்துள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி…

டெல்லி அரசியலில் ரூட்டை மாற்றிய தி.மு.க: லண்டனில் இருந்து ஸ்டாலின் போட்ட புதிய அரசியல் கணக்கு.

லண்டனில் இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூலை 16 அன்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். லண்டனில் இருந்து ஜூலை 16 அன்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக உரையாற்றிய…

அடுத்தடுத்து வெடித்த 2 சிலிண்டர்கள்: 4 வீடுகள் தீக்கிரை; அலறியடித்து ஓடிய மக்கள்- கோவையில் பயங்கரம்.

கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தொழிலாளர்கள் வசித்து வந்த அடுத்தடுத்த 4 ஓட்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் நேற்று இரவு…

கரூர் சம்பவம்: அரசு வேலைக்கு எதிரான வழக்கு வாபஸ்; சென்னை ஐகோர்ட் உத்தரவு.

கரூர் த.வெ.க. மாநாட்டு நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த பொதுநல வழக்கை, மனுதாரர் திரும்பப் பெற்றதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.)…

விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் புதிய மாற்றமாக ஒரே நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள்…

எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை யாருக்கும் மனசு இல்லை; ஆனால் விஜய்… இவரை பாராட்டணும்: அன்புமணி பரபரப்பு பேச்சு.

கடந்த கால முதலமைச்சர்களுக்கு இல்லாத துணிச்சலுடன், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும்…