வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் பெரிய பிளான் போட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த தேர்​தலில் 233 தொகு​தி​களில் விஜய்​யின் த.வெ.க தனித்துப் போட்​டி​யிட்டது. எடப்​பாடி தொகு​தி​யில் மட்​டும் சுயேச்சை வேட்​பாள​ருக்கு ஆதரவு அளித்தது.  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் த.வெ.க சென்று கொண்டிருக்கிறது.

த.வெ.க தொண்டர்களால் திருப்பலி பாதிப்பு இல்லை; விஜய் வராமல் இருக்க இந்த 3 காரணங்கள்: வேளாங்கண்ணி ஆலய நிர்வாகம் விளக்கம்

இதனிடையே, சில தொகு​தி​களில் வெற்றி பெறும் த.வெ.க வேட்​பாளர்​களை குதிரை பேரத்​தின் அடிப்​படை​யில் இழுக்க தி.மு.க, அ.தி.​மு.க முயற்சி செய்​ய​லாம் என விஜய்க்கு தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்​து, 2 நாட்​களுக்கு முன்பு கட்​சி​யின் வேட்​பாளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​திய விஜய், ‘வெற்றி பெற்​றதும் வேறு எங்​கும் செல்லாமல் எந்​நேர​மாக இருந்​தா​லும் பனையூருக்கு வந்துவிட வேண்​டும். உங்களுக்காக நான் காத்​திருப்​பேன்’ என அறிவுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.