சென்னை உயர் நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் உள்ள விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் என்பவர் ஒரு குறிப்பிட்ட தகவலைச் சுட்டிக்காட்டியிருந்தார். விஜய்யின் வேட்புமனுவில் தனது மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விவரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்துள்ளது.

நீங்க விரும்பும் செய்திகள்