நமது மகன்களை நீங்கள் நேசிக்கும் விதம் நமது வாழ்க்கையின் ஒரு அழகான கவிதை. உலகின் சிறந்த அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்,” என்று நயன்தாரா எழுதியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை நயன்தாராவின் திரையுலகப் பயணத்தில் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் முழு ஆதரவாகக் கூடவே இருக்கிறார். இதனிடையே தந்தையர் தினத்தில் (Father’s Day) விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பகிர்ந்துள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. “உலகின் சிறந்த அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்” என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.