“ஈபிஎஸ்க்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்; அவர ஏன் பாக்கணும்..” என சி. வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதேபோல த.வெ.கவில் சேர்வது குறித்த கேள்விக்கும் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் அ.தி.மு.கவின் உட்கட்சி நகர்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக தலைவர்கள், அரசியல் களத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.