பெண்களுக்கு எதிராக பேசியதால் வலுவான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை தொடர் விவாதத்திற்கு உட்படுத்த தேவையில்லை. அது நேற்றோடு முடிந்துவிட்டது; திருச்சியில் திருமாவளவன் பேட்டி.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
தமிழக பட்ஜெட் இன்று துவங்கிய நிலையில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிக்கையை ஜெப மாலையுடன் கொண்டு வந்தது குறித்த கேள்விக்கு, “பட்ஜெட் தாக்கலின்போது பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்த நிதி அமைச்சர் மரிய வில்சன், ஜெபமாலையையும் அதோடு சேர்த்து எடுத்து வந்தது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அரசமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசமைப்பு சட்டம் தான் மத நம்பிக்கையையும் அங்கீகரிக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் உள்ள இந்த முரண்பாட்டை பெரியார் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அம்பேத்கர், பன்மைத்துவத்தை போற்ற இது அவசியம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இன்றைய பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட் ஆகத்தான் இருக்கும் என கருதுகிறேன் பட்ஜெட் முழுமையாக வாசித்த பின்பு தான் அது தெரியும் ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு மாதத்தில் அவர்களால் புதிய திட்டங்களை செயல்படுத்தி பற்றாக்குறையை சரி செய்ய முடியாது.
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
