இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில் இல்லத்தரசிகளுக்கு சந்தோசம் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்
வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நச்சு தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்துவது உடன் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறைகிறது.
நீங்க விரும்பும் செய்திகள்
