“டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிப்பதில்லை. மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் விற்கும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும்” என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்குவோருக்குக் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் இந்த அதிரடி ஆணையைப் பிறப்பித்துள்ளார்.
“டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிப்பதில்லை. மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் விற்கும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்க வேண்டும்” என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தவும் கோரியிருந்தார். மேலும், கடந்த சில ஆண்டுகளில் நுகர்வோரிடம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையைச் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.