தமிழக பட்ஜெட் 2026 வெறும் பெயர் மாற்றமே தவிர, தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களுக்கான முக்கிய திட்டங்களையும் நிறைவேற்றத் தவறிய “புஸ்வாண பட்ஜெட்” என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா். காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
புஸ்வான பட்ஜெட் – ஸ்டாலின்
” இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
‘Blast Blast’-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste’ எனச் சொல்லும்படிதான் இருக்கு!
