த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டில் சென்னைக்கு பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கூவம், அடையாறு ஆறுகளை உலகத் தரத்தில் சீரமைக்க சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள், ரூ.25 கோடியில் புதிய பெருநகர விரிவான மாஸ்டர் பிளான் மற்றும் 1,000 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை (2026-2027) தாக்கல் செய்துள்ளது. இதில் சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை உலகளவில் சர்வதேச தரத்தில் சீரமைத்துப் படகு சவாரி விடும் திட்டங்கள், ரூ.25 கோடி மதிப்பீட்டில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிற்கான புதிய விரிவான மாஸ்டர் பிளான் திட்டம் உட்பட சென்னை மாநகரக் கட்டமைப்பை மேம்படுத்தும் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை புதன்கிழமை தாக்கல் செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சென்னையின் அடையாறு, கூவம் ஆறுகளை தூய்மைப்படுத்த உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அதுமட்டுமில்லாமில், சென்னைக்கு தற்போதைய மூன்றாம் மாஸ்டர் பிளானைத் தாண்டி, 5,904 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கிய சென்னை பெருநகரப் பகுதிக்கான விரிவான மாஸ்டர் தயாரிக்கப்படும் என்றும் உலகத் தரத்திலான நகரத் திட்டமிடல் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
