நாங்கள் பிளேட்லெட்ஸ் தானம் செய்தோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். என் சகோதரிகள் என்னைவிட இளையவர்கள். அந்த காலம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சலாக இருந்தது.

லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தனது பெற்றோர்களைப் பற்றி பொதுவெளியில் அதிகமாக பேசியதில்லை. திரையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும், தனது தனிப்பட்ட உணர்வுகளை பெரும்பாலும் வெளிப்படுத்தாமல் இருந்தவர். ஆனால், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணமான தாய் நர்கீஸ் மறைவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஏ.ஐ.ஜி ஹாஸ்பிட்டல்ஸ் (AIG Hospitals) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாய் நர்கீஸ் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிய காலத்தை சஞ்சய் தத் நினைவுகூர்ந்தார். “என் அம்மா கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அது 1980-களின் தொடக்க காலம். இப்போது இருப்பது போன்ற மருத்துவ தொழில்நுட்ப வசதிகள் அப்போது இல்லை. அவருக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்காக நாங்கள் நியூயார்க் சென்று ஸ்லோன் கிட்டரிங் (Sloan Kettering) மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம்.

“அவருக்கு பல்வேறு உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது எனக்கு 19 அல்லது 20 வயதுதான். என் அம்மா அந்த அளவுக்கு கஷ்டப்படுவதை நேரில் பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது. நாங்கள் பிளேட்லெட்ஸ் தானம் செய்தோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். என் சகோதரிகள் என்னைவிட இளையவர்கள். அந்த காலம் எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சலாக இருந்தது.