இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அரசுமீடியா இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். காலையில் டெல்லியிலிருந்து புறப்படும் அவர், காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்குத் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாகக் காரில் மாமல்லபுரம் சென்று பயிற்சி முகாம் நிறைவு நாளில் சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்வை முடித்துக்கொண்டு மாலை 6 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையம் வரும் அவர், இரவு 7 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.