தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசகர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.08.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Counsellor/ Psychologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 27,000

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 11,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.