அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விஷயம் சாதாரணமானது கிடையாது. ஒருவரின் தனிப்பட்ட விஷயம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஒருமையில் எவ்வளவு கீழ்தரமாக பேச முடியுமோ பேசியிருக்கிறார். அவர் பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த 20-ஆம் தேதி நடந்த தி.மு.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல் அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, த.வெ.க நிர்வாகிகள் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர்.