கட்சி மாறுபவர்களை விமர்சித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றதும் காங்கிரஸ், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஆதரவு கொடுத்து த.வெ.க ஆட்சி அமைத்தது. இதையடுத்து, பல கட்சிகளில் உள்ள தலைவர்கள் தற்போது த.வெ.க-வில் அதிரடியாக இணைந்து வருகின்றனர். இதில், அ.தி.மு.க-வில் இருந்து தான் ஏராளமானோர் த.வெ.க-வில் இணைந்து வருவதாக தெரிகிறது.
முன்னதாக அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்தார். அதன்பின்னர், பச்சைமால், பால கங்கா, வன ரோஜா ஆகியோர் அ.தி.மு.க-வில் இருந்து விலகினர். சமீபத்தில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜய பாஸ்கரும் அ.தி.மு.க-வில் இருந்து விலகினர். இப்படி அ.தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
