விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், கடந்த 40 நாட்களாகத் தி.மு.க தரப்பு கூட்டுச் சதியில் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், கடந்த 40 நாட்களாகத் தி.மு.க தரப்பு கூட்டுச் சதியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை குதிரை பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து த.வெ.க எம்.எல்.ஏ.க்களிடமும் கடந்த 40 நாட்களாக ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசி உள்ளனர். ஒரு சில எம்.எல்.ஏ.க்களை மிரட்டியுள்ளனர். தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி நடைபெற்றுள்ளது. ஸ்டாலின், உதயநிதி உத்தரவின்பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆட்கள் எங்களது பல எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேசி இருக்கின்றனர்.
தி.மு.க தரப்பில் இருந்து பேரம் பேசப்படாத த.வெ.க எம்.எல்.ஏ.க்களே இல்லை. தி.மு.க.வுடன் இ.பி.எஸ்யும் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; அவர்களில் ஒரு எம்.எல்.ஏ. புகாரளித்துள்ளார். த.வெ.க ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் தொடர்ந்து பேசுவதன் பின்னணி பேரம் தான். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் ரூ.40 கோடி, ரூ.50 கோடி கொடுத்து பர்சேஸ் செய்யும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்.
