அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க விஜய் ஆணயிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 65-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது . பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் மோசமான நிலையில் இருந்த 6 பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.