சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்து வரும் வேளையில், ஜூலை 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல உள்ளார். அங்கு கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுத் தங்களது உறவினர்களை இழந்த 41 குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, அவர் பேசத் திட்டமிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் வரும் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணத்தின் போது, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.