கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் த.வெ.க பிரச்சார பாடல் ஒளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர்கள் மாணவர்களுக்கு பட்டத்தை வழங்கும் போது இடையில் த.வெ.க பிரச்சார பாடல் ஒலிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.