பனையூரில் ஒரு நிகழ்வின் போது த.வெ.க தலைவர் விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரை தோளில் தட்டிச் சிரித்தபடி செம்ம திட்டு திட்டிய ரகசியத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.

பனையூரில் ஒரு முக்கிய நிகழ்ச்சியின்போது, த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய், கட்சியில் ஒரு முக்கிய நிர்வாகியை அழைத்து சிரித்துப் பேசியதாகவும் தூரத்தில் இருந்த பார்த்தவர்களுக்கு விஜய் அவரைப் பாராட்டியதாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனா, விஜய் அந்த நிர்வாகியை பாராட்டவில்லை, செம்ம திட்டு திட்டியிருக்கிறார். விஜய் ஏன் அந்த நிர்வாகியைத் டதிட்டினார் என்று அமைச்சர் ராஜ்மோகன் ஒரு சீக்ரெட்டைப் பகிர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஒரு புதிய வரலாறு படைத்திருக்கிறார். இரு பெரும் திராவிடக் கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அமைத்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள ராஜ்மோகன், சட்டமன்றத்திலும் வெளியேயும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார். 

அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், த.வெ.க தலைவர் விஜய், முக்கிய நிர்வாகியை அழைத்து சிரித்து சிரித்து பேசியதாகவும் ஆனால், உண்மையில் அவரைத் திட்டியதாகவும் விஜய் அவரை ஏன் ஏன் திட்டினார் என்று சீக்ரெட் தகவலைப் பகிர்ந்துள்ளார்.