தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், மேடையிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 3 முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். கவர்னர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா முடிவடைந்த கையோடு, மேடையிலேயே மக்கள் நலன் சார்ந்த முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது அதிரடிப் பணிகளை அவர் தொடங்கினார்.
இதுவரை இல்லாத ஒரு முன்னுதாரணமாக, பதவியேற்பு விழா மேடையிலேயே முக்கிய அரசாணைகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் முதற்கட்டமாக மூன்று மிக முக்கியமான மக்கள் நலத் திட்டங்களுக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
முதலமைச்சரின் முதல் மூன்று கையெழுத்துகள்:
முதலாவதாக, மின்சாரப் பயன்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
