தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராகப் பதவியேற்பதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியின் 20 முக்கிய இடங்களில் எல்.இ.டி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.