தங்கள் முதல் தேர்தலிலேயே 121 இடங்களுடன் (கூட்டணி ஆதரவுடன்) பெரும்பான்மை பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் புதுமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

தமிழகத்தில் தனது முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக ஆளுநருடன் நிலவி வந்த இழுபறிகளுக்குப் பிறகு, தற்போது நிலைபெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை நோக்கி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் திரும்பியுள்ளது.