தேவையான ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்த பிறகும், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்யும் தமிழகப் பொறுப்பு ஆளுநருக்கு, உடனடியாக உத்தரவிட வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறி தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் திரட்டியும் ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.