குதிரை பேரம் நடந்திருக்க வாய்ப்பு அதிகம். இப்போது மீண்டும் தினகரனுடன் வந்துவிட்டாலும், காமராஜிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் எப்போது வேண்டுமானாலும் பக்கம் மாறலாம் என்பதே மன்னார்குடி அமமுக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

தமிழக அரசியலில் ‘குதிரை பேர’ சர்ச்சையில் சிக்கிய மன்னார்குடி அ.ம.மு.க. எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் மீது, அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மீண்டும் அவர் டிடிவி தினகரனுடன் இணைந்துவிட்டாலும், அவரை முழுமையாக நம்ப முடியாது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.