முத்து படத்தில் ரஜினிகாந்த் – மீனா இருவருக்கும் இடையேயான மோதல், காதல், ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற முத்து திரைப்படம் குறித்து அவ்வப்போது பல தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்த படத்திற்காக ஒரு ஊரையே உருவாக்கி படப்பிடிப்பு நடத்தி, அந்த ஊரின் பெயரிலே ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர்.